பக்கங்கள்

ஆச்சி படுக்காளி அஞ்சரைப்பெட்டி 12/02/2010

படுக்காளி : தமிழ் வாழ்க!!!! தமிழன்னா என்ன கொக்கு குருவின்னு நினைச்சீங்களா, இன மான உணர்வெல்லாம் அத்துப் போச்சுன்னு நினைச்சீங்களா, கொளுத்தீப்புடுவோம்,
ஆச்சி : வாடா படுக்காளி, சவுண்ட் பலமா இருக்கே, கை கால் மூஞ்சி எல்லாம் ஏண்டா கரியாயிருக்கு.
படுக்காளி : வீட்டுக்குள்ளயே ஃபோட்டாவிலேயே இருந்தா ஆச்சா ஆச்சி... அச்சா!! நாட்டு நடப்பு தெரிய வேண்டாமா
ஆச்சி : நாலு தெரு போயி நாட்டாமை பண்றவன் நீ தானடா, விவரத்த
சொல்லு
படுக்காளி : மலையாளத்துல லேட்டஸ்டா ஒரு படம் எடுத்துருக்காங்க ‘ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்’ இதுல நடிச்ச, ஜெயராமன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில பேசுறார். ரிப்போர்ட்டர் கேக்கிறார் ‘ஏன் சார் இந்த பட்த்துல வர மாதிரி வீட்டுலேயும் வேலைக்காரிக்கிட்ட ஜொள்ளு விடுவீங்களான்னு’ அதுக்கு நம்ம அண்ணன் பதில் சொல்லும் போது ‘எங்க வீட்டு வேலைக்காரி தமிழச்சி, தடிச்சு எருமை மாதிரி இருக்கா, அவள யாரு பாப்பாங்கன்னு’
ஆச்சி : அடப் பாவமே. வாயில சனி, மூக்கில சளி இரண்டுமே சிந்தினாலும் போகாதேடா....
படுக்காளி : சும்மா விட்டுருவோமா, இன மான தமிழனெல்லாம் ஒண்ணு திரண்டு அடிச்சு வீட்ட ஒடைச்சாச்சு, கார கொழுத்த டிரை பண்ணோம், ஜெஸ்ட் மிஸ்ஸாயிருச்சு.
ஆச்சி : கொழுத்துனா சரியாப் போச்சா, வன்முறை எப்படிறா சரியாகும். கொஞ்சம் மூக்க பொத்திக்கோ இதபத்தி நான் ஒரு மேட்டர சொல்றேன். சாக்கடையில கல்ல எறிஞ்சா நம்ம மேல தானடா தெறிக்கும்.
படுக்காளி : அதுக்குன்னு வாயில வந்ததெல்லாம் பேசலாமா.
ஆச்சி : வாடா, அவசரத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தவனே. உன்ன பத்தி தான சொன்னேன்.
படுக்காளி : சரி ஜெயராமன் பத்தி சொல்லுங்க
ஆச்சி : கேக்குறவங்கள சிரிக்க வைக்கணும், காமெடி பண்ணனும் என்கிற நினைப்பு நல்லது. அதுக்காக எத சொல்லணும் எத சொல்லக்கூடாதுங்கறதுல நாமதான் உஷாரா இருக்கணும். இப்படி வச்சுக்கோயேன், ‘எங்க வீட்டுல வேலைக்காரி பார்க்க நல்லாயில்லீங்க’ என்று மட்டும் பரைஞ்சிருந்தால் இவ்வளவு தூரம் வெளிய தெரிஞ்சிருக்காது.
படுக்காளி : ஆனா, வீட்டுல குத்து வெட்டு நடந்துருக்குமே. அவங்க வீட்டுகாரம்மா, வேலைக்கார வீட்டுல யெல்லாம் விவகாரம் ஆயிருக்குமே
ஆச்சி : கரெக்டா சொன்ன, இதயே இப்படி சொன்னா எப்படி இருக்கு ‘ நல்லாயிருக்கேங்க நீங்க சொல்ற கதை. போன சினிமாவில, சட்டத்த மீறின ஒரு ஆள, துப்பாக்கிய சுட்டு போட்டு தள்ளினேன். அதுக்காக அத நெசத்துலயும் செய்யுங்க சார்ன்னு சொல்லி கையில அருவாள திணிப்பீங்களோ சார்....’ என சொல்லியிருந்தால் கேள்வி கேட்ட ஆள திருப்பி சட்டய பிடிக்கிற மாதிரி இருக்காது.
படுக்காளி : ஆமாயில்ல, விவகாரமான கேள்விய கேட்டுபுட்டு அந்தாள் கம்முன்னு இருக்காரே. பதில் சொன்ன சேட்டன் மட்டும் சேத்துல விழுந்திட்டாரே.
ஆச்சி : வாயில இருக்கிற வரைக்கும் அதுக்கு பேரு ஃபுட்டு அல்லது புட்டு, துப்பிட்டா அதுக்கே எச்சின்னு பேரு. நெல்ல போட்டா அள்ளிரலாம், சொல்ல போட்டா.... கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் எல்லாம் பத்திரமா இருக்கட்டும், நாம இப்போ பேசுறது இங்கீதத்த பத்தி.
படுக்காளி : இதுதானா ஆச்சி, யாகாவராயினும் நாகாக்கன்னு வள்ளுவர் சொன்ன மேட்டர். ஆச்சி : வெள்ளக்காரன் ஒரு கருத்து சொல்லுவான். நான் பேசுற இந்த மேட்டரு கேக்கிறவனுக்கு சந்தோசம் தருமா, நன்மை பயக்குமான்னு கவனமா பேசு தம்பின்னு, அதுபோல ஒரு பில்டர எப்பவும் வாய் பக்கத்தில வைச்சிருந்தா நமக்கும் மத்தவங்களும் நல்லதுடா.

2 கருத்துகள்:

  1. ஜெயராமா ஜெயராமா... இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஜெயராமா... ஏற்கனவே தமிழ்நாட்டுல இன்னிக்கு ராமன் என்று இருந்தால் பிடிக்கவில்லை என்பது போன்ற ஒரு மாய தோற்றம் இருக்கு... இதுல இப்போ, நீ வேறயாடா... அய்யோ... அய்யோ...

    கருத்து தடித்த எருமை என்று வேலைக்காரியை வீட்டினுள் வைத்து திட்டினால் வேலையை பாதுகாக்க அவள் சும்மா இருந்திருப்பாளோ என்னவோ... வீதியில் வைத்து, சாட்டிலைட் சேனல் ஒரு மைக் கொடுத்ததும் சொல்லிட்டியேப்பா.... சொல்லிட்டியே...

    இனி உன்னிய அந்த ஆண்டவனால கூட காப்பாத்த முடியாதே... ஏற்கனவே வூட்ட பத்த வச்சுட்டாய்ங்க... உன் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த கார் தீ ஜோதியில் ஐக்கியமானதால், அதை இப்போது காயலான் கடைக்காரர் கூட வாங்க மாட்டார்...

    இதெல்லாம் தேவையாட மண்டையா??

    ஏற்கனவே அங்கன இருக்கற மோகன்லால் அவனோட எல்லா படத்துலயும் தமிழர்களை “பாண்டி” என்று பெயரிட்டு அழைத்து அவமானப்படுத்துவான்...

    நீ வேற தமிழ்நாட்டுக்கு வந்தா கும்பகோணத்துக்காரன், பச்சை தமிழன்னு சொல்ற... கேரளா போனா, மலையாளின்னு சொல்ற... இப்போ, உன்னோட இரட்டை வேஷம் கலைஞ்சு போச்சேப்பா...

    இனிமேலயாவது, படத்துல மட்டும் நடி... வெளியில நடிக்காத... அப்புறம் பேரு மட்டும் இல்ல... எல்லாம் கெட்டு போயிடும்...

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல ஜெயராமுக்கு ஒரு கிலோ புண்ணாக்கு... தந்தாச்சு... அப்புறம் உன் இஷ்டம்...

    பதிலளிநீக்கு
  2. வாங்க, ஜி!!!

    நக்கல், நையாண்டி, தூக்கலா இருந்தாலும் அதை தாண்டி, உள்ளுக்குள் இருக்கிற வெப்பம் சுடுதே...

    நல்லா இருக்குது.

    தமிழுக்கும், தங்கள் சிந்தனைக்கும் தலை தாழ்ந்த வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு