பக்கங்கள்

புத்தியை சிறையில் அடை !!!

என்னடா படுக்காளி, ஆன்மிகம் பத்தி எழுதவே மாட்டேன்னு இருந்தியே.... தலைப்ப பாத்தா கொள்கையில கொப்பரை போல இருக்கே என அவசர தீர்மானம் வேண்டாம்.

இந்த அமெரிக்கா நகரத்திலே, அதிபருக்கு எதிராய் எழுதப்பட்ட ப்ளாக்ஸ்பாட்டின் தலைமை வலைஞர் அண்ணன் விக்ரம் புத்தியை சிறைப்படுத்தி விட்டார்கள்.

கர்நாடக மைந்தன், ஆந்திராவில் பயின்று, ஐஐடி யில் ஜல்லியடித்து விட்டு, இன்று அமெரிக்காவில் கம்பி எண்ணுகிறார். புஷ் அரசுக்கு எதிரான கொள்கைகளை தன் வலைப்பதிவில் சொன்னதால் என்றதும், லேசாய் கதிகலங்கித்தான் விட்ட்து. ப்ளாக்ல எழுதுனா கம்பி எண்ணனுமான்னு...

அப்புறம் பாத்தாத்தான் தெரியுது, வண்டவாளம் தண்டவாளம் ஏறின கதை. கருத்து சுதந்திரம் என்பது வளர்ந்த நாடுகளில் சாஸ்வதம். நம் சுதந்திரம் நாட்டுக்கு குந்தகம் விளைவித்தால் குற்றமே.

சமூக சிந்தனைக்கு ஒரு சல்யூட், சறுக்கிய சிந்தனையில் வன்முறைக்கு வித்திட்ட விவகாரத்துக்கு ஒரு எச்சரிக்கை.

முன் காலத்தில் சட்டம் ஒழுங்கு மீறியவர்கள், மனிதர்களே அல்ல, அவர்கள் மிருகமே என்றார். சில்வா மைண்ட் கண்ட்ரோலில் கூட சராசரி மனிதனால், 18 ஹெர்ட்ஸ்க்கு மேல் மூளை சிந்திக்கவே முடியாது. அதனால் தான் நம்மால் கொல்ல முடியாது என்பார். மனிதம் இல்லாதவரை விலங்கை போல் கூண்டில் அடைத்து வைத்த பழக்கமே சிறைச்சாலை.

மனம் ஒரு தங்கத்தட்டு. எல்லாம் நல்லது வைத்துவிட்டு ஒரு துணுக்கு மலமும் இருந்தால் நமக்கும் நாட்டுக்கும் எந்த பிரயோசனமும் இல்லை.

பேரையும் வைச்சுட்டு அது இல்லைன்னா எப்படி சார்.....

2 கருத்துகள்:

  1. படுகாளிக்கு..

    கர்நாடக மைந்தன், ஆந்திராவில் பயின்று, ஐஐடி யில் ஜல்லியடித்து விட்டு, இன்று அமெரிக்காவில் கம்பி எண்ணுகிறார். புஷ் அரசுக்கு எதிரான கொள்கைகளை தன் வலைப்பதிவில் சொன்னதால் என்றதும், லேசாய் கதிகலங்கித்தான் விட்ட்து. ப்ளாக்ல எழுதுனா கம்பி எண்ணனுமான்னு... இது என்ன சின்ன புள்ளதானமா இருக்கு... அப்ப நாமல்லாம் எப்படித்தான் Performance பண்ணுறது... இது எதுவும் வெளி நாட்டு சதியா இருக்குமோ...

    செல்லத்துரை

    பதிலளிநீக்கு
  2. /// cdhurai சொன்னது…
    இது என்ன சின்ன புள்ளதானமா இருக்கு... அப்ப நாமல்லாம் எப்படித்தான் Performance பண்ணுறது... இது எதுவும் வெளி நாட்டு சதியா இருக்குமோ...///

    ஹா.... ஹா.... மிக நல்ல டைமிங் பின்னூட்டம். வந்து கருத்து தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு