பக்கங்கள்

லோ கிளாஸ் எதிர் வினை

கேக்கதுக்கு ஆளு இல்லைன்னா எது வேணா எழுதுவியா என படுக்காளி சட்டை பிடித்தார் நண்பர் ஒருவர்.

சில தினங்களுக்கு முன் எழுதிய லோ கிளாஸ் பதிவை பார்த்து. ம்... நல்லா இருக்கு தொடர்ந்து எழுது எனும் சில நண்பர்களின் வாழ்த்தோடு வந்த இந்த சட்டை பிடி ரொம்ப பிடிச்சுது.
ரொம்ப ரொம்ப பிடிச்சது.

வெறும் பொருளாதாரத்தின் அடிப்படையில் விளைந்த விரிசல் தான் இந்த லோ கிளாஸ் ஹை கிளாஸ் எல்லாம். நீ சொல்ற மாதிரி ரசனையில் மாறுபாடு என்பது நீ பிடித்த ஜுகல்பந்தி.

காசு கம்மி ஜாஸ்தி அவ்வள்வுதான். ஒரே காசுன்னு சொல்லி பாரு எல்லா ஜனமும் இங்கே தான் இருக்கும்.

அப்புரம் என்ன சொன்ன, நீ லோ கிளாஸ்!! அங்கய இருக்க ஆசைப் படுறேன்னு, பான் பீடா மொழுகிய தரைய பார்த்து காலை தூக்கி மேல வைக்கல. வைச்சல்லே, அப்புறம் என்ன நான் லோ கிளாஸ்ன்னு ஒரு பீலா.

பக்கத்து சீட்டு கை தட்டல்ல புல்லரிச்சுது, அடுத்தவங்க உணர்ச்சி உண்ணோடயும் ஒட்டிக்கிச்சுன்னு ஒத்து உதியிருக்கியே. கேக்காத வசனமும், இளையோடும் இசையின் நைச்சியமும் உணர முடியாமல் நான் தவிச்சுப் போயி கிடக்கிறேன்.

யாரோ ஒருத்தன் ‘என்னைப் பாரு என் அழகைப் பாருன்னு அவன முன்னிறுத்தி கூவுரது உனக்கு குயில் பாட்டா. அடுத்தவங்களுக்கு தொந்தரவு தர்றது நல்லதா. நான் பார்க்க வந்த்து சினிமாவத்தான். உனக்கு வேணும்னா!! இவன் கூச்சல் கேக்கனும்னா அதுக்கு தனியா டிக்கட் வாங்கிக்கோ.

நண்பரின் வார்த்தைகள் அத்தனையும் உக்கிரமும். உண்மையும் நேர்மையும் உடையது.

படுக்காளிக்கு ஒரே குஷி. திட்டுரது தித்திக்குதா.

நான் எழுதுறதே படிக்கிறவுங்கள சிந்திக்க வைக்கவும், அந்த சிந்தையில் இருந்து நான் கத்துக்குறதுக்கும் தான்.

இலக்கு அடைந்த நிறைவில் என் எழுத்துக்கள் பூரிக்கின்றன. நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக