பக்கங்கள்

அட போடா பயந்தாங்கோளி...

“அட போடா பயந்தாங்கோளி”
இதை அடுத்தவர் சொன்னாலும், நமக்கு நாமே சொன்னாலும் ஒத்து கொள்ளமால் மனம் அடம் பிடிக்கும். இல்லை என்று சொன்னாலும் இல்லாமலா போய் விடும். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அல்லவா.
மனித பயங்களில் எது முதன்மை ஆனது. மரண பயம்.
ஏன் இந்த பீடிகை, நீட்டி முழக்கி, மூக்கை சுத்தி ஏன் காதை பிடிக்கிற என்ற உங்கள் மனக் குரல்கள் எனக்கு கேட்கிறது
சமிபத்தில் என்னை அசைத்து பார்த்த சிந்தனை இது. முன்று சம்பவங்கள்.
1. அலுவலக நண்பன் தன் இரண்டு வயது மகனை முச்சு பேச்சு இல்லாத நிலையில் மரண விளிம்பில் நிறுத்தி, மீண்டும் வாழ்வுக்குள் இழுத்து வந்தது முதலாவது
2. 75 வயதை கடந்து - தான் ஈன்ற பிள்ளைகளால் புரக்கணிக்கப்பட்டு, தன் உடலும் மனமும் ஒத்துளைக்காது வாழ்ந்த என் மாமன், இறந்து போனார் என்ற செய்தி நிம்மதி பெருமுச்சாய் வந்தது இரண்டாவது
3. 45 வயது வாடிக்கையாளர் கருத்தரங்கு சென்ற இடத்தில் அகாலமாய் இறந்தார் என்ற போது உண்மையா என்று எதிர் கேள்வி கேட்டது மூன்றாமது
மரணம் தவிர்க்க முடியுமா?
சில பரிஷத் மகாராஜக்களை கதையாய் கேட்டது உண்டு. பாபா என்று நித்திய வாழ்வு பற்றி புரியாத பாஷையில் கேட்டதும் உண்டு. சராசரி மாமுல் ஒத்து கொள்ள பட்ட சிந்தனையில் மரணம் தவிர்க்க முடியாததாகவே தோன்றுகிறது.
மூன்று செய்திகளுமே என்னிடம் சொல்ல பட்டபோது, எல்லா நினைவுகளையும் உதிர்த்து ஒரு முகமாய் கேட்டேன். மிக முக்கியம் என்று நான் நினைத்து செயல் பட்டு கொண்டிருந்த அன்றாட அலுவல்கள் கூட ... முக்கியமா ??? இல்லை என்பதாய் உதிர்க்கப் பட்டன.
கோரமாய் நின்ற கேள்வி, என் கண்களை உற்று நோக்கியது போலே. ஏன் இந்த நிலை.
மரணம் வயது முதிர்ந்த போது இயல்பும் நியாமும் ஆகிறதோ. அதுவே இளமையில் கொடுமை என்று அர்த்தம் ஆகிறதோ .
மேலே சொன்னது விடை நோக்கி செல்லும் வாக்கியமோ.
இரண்டு வயது பிள்ளை இன்னும் அனுபவிக்கவில்லையே என்ற ஆதங்கம், மத்திய வயதில் அவன் செய்ய வேண்டிய கடமையை தீர்க்க வில்லையே என்ற கூக்குரலோ.
மரணம் எப்போது வேண்டுமானாலும் சம்பவிக்கும் என்ற நிதர்சனம் நிமிர்த்து நிற்கும்போது நாம் என்ன செய்ய. எப்படி போக்குவது இந்த பயத்தை.

உலக வாழ்வை நாம் வாழ்ந்து, இளைய சந்ததிகள் அதை உணர சூழ்நிலை அமைத்து தந்தால் .....

காலா .... வா என் அருகில் உன்னை என் காலால் எட்டி உதைப்பேன் என்று முண்டாசு கட்டி நாமும் மகா கவியாவோமோ

1 கருத்து:

  1. பேய்கள நம்பாத பிஞ்சுல வெம்பாத - நீ யோசி டோய்

    நாளொரு பொய்வாக்கு சொல்பவன் புண்ணாக்கு - கால் தூசி டோய்

    பதிலளிநீக்கு