பக்கங்கள்

ஆத்மாவின் பயணம்

கதை ...
அதிரடி விஞ்ஞான நகைச்சுவை

வாருங்கள் பூமி விட்டு வேறு கிரகம் சென்று ஒரு ரவுண்டு அடித்து விட்டு வரலாம்.


10...09…08....
பூமியில் இருந்து கோடிக்கணக்கான மைல் தொலைவில். நீண்ட குழா புட்டு வடிவத்தில், ரிம் என்று ஓசையோடு அந்த விண்கலம் தரை இறங்க தயார் ஆனது. ஆத்மா கடைசி நேர சமிக்கைகளை சரி பார்த்து கொண்டே ஆவலாய் உட்கார்ந்து இருந்தான். 'அடுத்த முறை பயணிக்கும் போது கால் நீட்டி படுக்க வசதி செய்ய வேண்டும்'. மனதினுள் நினைத்தான். எங்கே இதற்கே இத்தனை செலவு. நிர்வாகமும் அரசும் இவன் வசதியை கோரிக்கையை ஏற்று கொள்ளாது.
யார் இந்த ஆத்மா. புத்திசாலியான இளம் விஞ்ஞானி. ஐந்து வருடங்கள் அவன் போராடி இந்த பயணத்தை மேற் கொள்கிறான். முதல் முதலில் இப்படி ஒரு கிரகத்தை கண்டுபிடித்து அதற்கு 'டகால்டி' என்று பெயரிட்டு, பசி தூக்கம் மறந்து, காதலை மறந்து, அதிகாரிக்கு காகா பிடித்து பெற்ற சாதனை இது.
வயிற்றில் கர் புர் சத்தம். திரவமும் இல்லாமல், திடமும் இல்லாமல் மாத்திரை மாதிரியாய் விழுங்கிய உணவு லேசான அவஸ்தை தந்தது. 'ஊருக்கு போனதும் நல்லா குளிக்கணும்'
07…06…05…
மனித உயிர்கள் போலே சிந்திக்கும் திறன் உடைய வேற எதாவது பிராணி வேற எங்காவது உண்டா என்ற ஆராய்ச்சியில் உழண்டு கொண்டு இருந்த நிறுவனம் அவன் ஆசை பட்டு சேர்ந்த ஆராய்ச்சி கூடம். வெளி உலகுக்கு தெரியாது... என்று நான் சொல்லி விட்டதால் உங்கள் நேரம் மிச்சம். இல்லை என்றால் இதை தேடி கொண்டு இருப்பிர்கள்.

ஒரு நாள் தற் செயலாய் சம்பாஷனைகள் ஆராய்சியில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஒரு வாக்கியம் போலே தெரிந்தது. பல மணி நேர ஆராய்ச்சியில் இன்னும் புரிந்தது . இன்னும் சற்று முயன்றபோது உணர்வு புரிந்தது. அது ஒரு வலியின் ஓசை என்பது புரிந்தது. தன்னிசையான சொல்லாய் இல்லாமல், அடுத்த உயிருக்கு அந்த வலியை சொல்லும் அர்த்தம் கண்டுபிடிக்கப்பட்டது. ஐயோ! அல்லது ஒ! என்று இல்லாமல், எனக்கு உயிர் போகும் வலி என்பதாய் அர்த்தம் / அனர்த்தம் செய்யப்பட்டது. வலியை சொல்லும் ஒரு உயிரினம் புத்திசாலி தானே.
அதை தொடர்ந்து செய்த ஆராய்ச்சியின் பலன், அந்த கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அங்கு நீர் இருப்பதும் தெரிந்தது. அழுது அடம் பிடித்து அரசும் சம்மதிக்க, 9099 கோடி செலவில் இந்த விண்வெளி பயணம் மேற் கொளப்ட்டது. இதில் ஆத்மாவின் சம்பளம் மட்டும் ரூ 1,99,500 இதர தள்ளுபடிகள் தனி. வாங்கும் சம்பளம் செலவளிக்கவே நேரம் இல்லை. இன்னும் கொடுத்தால் ஆத்மா என்ன செய்ய.... என்று சும்மா இருந்து விட்டான்.
04…03…
என்ன பயணம் இது. திருச்சி கும்பகோணம் போல் அல்லாது வெளி கிரக பயணம். கிரக சாரம். எது எப்படி இருக்கும் என்றே தெரியாது. ஹோட்டல் புக்கிங் இல்லை. போர்டர் இல்லை. உயிருக்கு கூட உத்திரவாதம் இல்லை. அழுது கொண்டே வழியனுப்பிய ஜுலி - மொச மொச நாய் நினைவுக்கு வந்தது. நான் இல்லாமல் நீ எப்படி இருக்கிறாயோ ஒழுங்காக சாப்பிடாயா. உனக்கு கழுத்தில் மாட்ட சங்கிலியோ பட்டையோ வாங்க ஆசை. இங்கு கிடைக்குமா…
இந்த கிரகத்தின் சூழ்நிலை எப்படி இருக்கும. அதிக குளிரூ... அதிக உஷ்ணம்... ஒரு இழவும் தெரியலே. என்றாலும் பரவாயில்லை. நான் போட போகும் கவச உடை 500 டிகிரி தாங்கும். ப்ளஸ்சோ மைனசோ பரவாயில்லை.
கௌண்ட் டொவ்ன் இன் இறுதி நிலை…
02…01….
தொடரும்



ப்ராஜெக்ட்: டகால்டி 12345 பகுதி 2

விண்கலத்தின் உலோக அடி வயிறு கிறீச்சென்று திறந்து, கவச உடையுடன் படபடக்கும் இதயத்தோடு ஆத்மா. வைக்க இருந்த இடது காலை சற்றே சிந்தனையில் மாற்றினான். 'செண்டிமெண்ட் விடுவானே' எம்பி கை பிடித்து வலது கால் தரையில் பட தொம் என்று குதித்தான். 5 அடி உயரம் தான் என்றாலும் பளுவான கவச உடையில் சற்றே சங்கடம்.
கவச உடையின் கண்ணாடி வழியே தெரிந்தது டகால்டி கிரகம். அப்பா என்ன அழகு. வரைந்து வைத்த ஓவியம் போலே.
பச்சை புல் அடர்த்தியாய் வளர்ந்து மெத் மெத் என்று போர்வை போலே தரையில். பளிச்சென்ற வண்ண நிறத்தில் பூக்கள் நிறைந்து இருந்தன செடியில். மிக உயர்ந்த மரங்களும் அடர்த்தியான இலைகளும் குளுமையாய் நிழல் பரப்பி நின்றன. கையில் உள்ள கருவியில் சீதோசனம் பார்த்தான். 16 டிகிரி. வாவ் பெங்களூர் மாதிரி. ஆக்ஸிஜன் அளவு. மிக துல்லியம். அப்போ எதுக்கு இந்த கவசம். தூக்கி எரி.
ஹும்… எத்தனை செலவு செய்தோம் இதற்காக. பண விரயம் கால விரயம்.
கவசத்தை கழட்டி வைத்த போது நன்றாக இருந்தது. குளுமையான காற்று உடம்பில் தென்றலாய் தவழ்ந்தது. நல்ல பூக்களின் நறுமணம். ஆஹா சுவர்க்கம் போலே அல்லவா உள்ளது. நான் எத்தனை பெரிய விஷயம் செய்துள்ளேன். உலகமே கொண்டாட போகிறது. அமைதியாய் லேசாய் நடை போட்டான்.
சட்டென அந்த ஆபத்து. சற்று தொலைவில் புலி ஒன்றை பார்த்தான். பூமியில் உள்ளது போலே. ஆனால் அதை விட்ட பெரியதாய் ஆரோக்கியமாய் மிக கூரிய பற்களுடன். ஐயோ எத்தனை பெரிய தவறு செய்தோம். கவச உடை கழட்டி இருக்க கூடாது. இத்தனை உழைப்பும் வீண் ஆயிற்றே. இத்தனை பெரிய விஷயம் சிரிய மனித மடமையில் வீனானதே… விண்கலத்தில் ஏறி இந்த செய்தி சொல்லவாவது அவகாசம் உண்டா. பயம் வயிறை அப்பி பிடித்தது.
புலி அவனை நோக்கி ஓடி வந்தது. திரும்பி ஓட திரும்பியபோது ஆத்மா கிழே விழுந்தான். இது வேரயா ! சுதாரித்து எழும்பும் முன் புலி அவன் அருகிலே. கண்களை உற்று நோக்கியது. சரி முடிந்தது என்று என்னும் போது, புலி அருகில் குனிந்து முகர்ந்து பார்த்தது. ஆழமாய் முச்சு இழுத்து முகர்ந்து பார்த்தது……… ஹச்.!!! …. ஒரு தும்மல் போட்டது. 'ஊர்ல பார்த்த புலி (ஜூவிலே) பக்கத்தில போனாலே நாறுமே, இது தும்மினா கூட நாரலையே' - என்ன சிந்தனை இது என்று நினைவின் ஊடே... ஆத்மா அதிர்ந்தான். மறுபடியும் குனிந்து புலி கன்னத்தில் முத்தமிட்டது. புலி மீசை லேசாய் குத்தினாலும் முத்தம் பரவாயில்லை நல்லா இருந்துச்சு என்ன இது.!!!! புலி அவனை பார்த்து சிரித்தது. என்ன இது புலி சிரிக்குமா. மெல்ல எழுந்தபோது புலி அவனை விட்டு விலகி ஓடியது. தூரத்தில் சென்று கொண்டு இருந்த ஒரு யானையை துரத்தி பிடித்தது.
ஆத்மா நினைத்தான். ஒ இந்த கிரகத்தில பெரிய உணவு தான் முக்கியமோ. சரி என்ன ஆனாலும் கவசம் போட்டாத்தான் சரி. திரும்பி நடக்க முற்படும் போது, அவன் பார்த்த காட்சியில் மீண்டும் ஆச்சரியத்தான்.
ஓடி சென்று பிடித்த புலி யானையின் வயிற்று பகுதியில் எட்டி கிச்ச் கிச்சு மூட்டியது. யானை சங்கடமாய் நெளிந்தது. வாய் விட்டு சிரித்தது. நீண்ட தும்பிக்கையை நீட்டி புலியின் காதை பிடித்தது. பிடித்த காதை மெல்லமாய் திருகியது. புலி சுழன்று மறுபடி சிரித்தது.
அந்த காட்சியின் தாக்கம் அவனை விட்டு விலகவே இல்லை. எப்படி இது சாத்தியம். சிந்தித்துகொண்டே நடந்ததால் பாதை சரியாய் கவனிக்காமல் அருகில் உள்ள குழியில் விழுந்தான். அம்மா... ஆ கத்திகொண்டே தரை தொட்டான்.
எழுந்து பார்த்தபோது முட்டில் நல்ல வலி தெரிந்தது. எலும்பு முறிந்து இருக்கும் போலே. சே… என்ன இது பார்த்து நடந்து இருக்க வேண்டாமா என்று நினைத்து கொண்டு இருந்த போது, காற்று சுழன்று அடித்தது. மெல்லியதாய் அந்த காயத்தை சுற்றி வலுபெற்றது. அந்த காயத்தில் படர்ந்து சுழல ஆரம்பித்தது. லேசான சூடு அதில் தெரிந்தது. ஆழ்ந்து சுவாசித்ததில் லேசான மருந்து வாடை. ஒன்று… இரண்டு… மூன்று… சுழற்ச்சி நின்றது! காற்று காணாமல் போனது. வலி இருந்த இடமே தெரியவில்லை. விழி விரித்து நின்றன் ஆத்மா. கால் உதறி பார்த்தான். நான் விழுந்தேன் அல்லவா, வலி உயிர் போனது போலே இருந்தது அல்லவா. பின்னே எப்படி சரி ஆனது.
என்ன வினோதம் இது. இப்படி எல்லாம் கூட நடக்குமா.
அப்போது செடி அசைவிலே யாரோ வருவது தெரிந்தது. கண்களை கூர்மையாக்கி ஆத்மா பார்த்தான். நல்ல உயரத்தில் கோதுமை நிறத்தில் நீண்ட கூந்தலுடன் ஒரு பெண்… இல்லை ஒரு தேவதை அது. ஒயிலாக மயிலாக நடந்து வந்தாள். வசிகரமாய் சிரித்தாள். அவள் அருகில் வந்த போது நல்ல ஒரு நறுமணம். ஹும்…. ஆழ்ந்து காற்றை சுவாசித்தான். பளபளப்பான மேனியில் ஆடை இல்லை. சங்கடமாய் பார்த்தான் ஆத்மா.
தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக